தேசிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறுவதற்கு முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் ஊடாக இந்த விடயம் தெளிவாக புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறினால், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே ஆட்சியில் இருக்கும் என்பதால், மாற்றத்தினை எண்ணி தாம் கவலையடையப் போவதில்லை எனவும் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விஜயத்தின் ஊடாக அனுர குமார திசாநாயக்க, முதலீடு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பிலான பாடங்களை கற்றிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.