கொழும்பி துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி..!

கொழும்பு மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (21) காலை 7.15 இற்கு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடயாளந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த நபர் வெல்லே சாரங்க எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version