தலைமன்னார் – ஊர்மனை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 07ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி K.L.M. சாஜித் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்ட ஐவரின் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.இந்த வழக்கில் சிறுமி சார்பாக மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி காணாமற்போன குறித்த சிறுமி தலைமன்னார் ஊர்மனையிலுள்ள தென்னந்தோப்பொன்றிலிருந்து கடந்த 16 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதியானமை குறிப்பிடத்தக்கது.