ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய சில்லறை விலை 1,180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தோல் இல்லாத கோழி ஒரு கிலோ கிராம் 1,120 ரூபாவாகவும், கறி கோழி ஒரு கிலோ கிராம் 1,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.