மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு…

சிறு போகத்தில் மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சிறு போகத்திற்கு தேவையான நீர் போதுமாதான உள்ளதென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் துறையின் கீழ் 258 அணைக்கட்டுக்கள் உள்ள நிலையில் அந்த நீர்த்தாங்கிகளின் நீர் கொள்ளளவு 90% ஐ கடந்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version