சிறைச்சாலை கைதிகளால் இவ்வளவு வருமானமா?

கைதிகள் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கடந்த வருடம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டு கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடச் செய்தமையால் 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் சிறைக் கைதிகள் ஊக்குவிக்கப்படுவதால் அவர்கள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதாகவும்சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படுவது நன்மை பயக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுவதாக கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version