பிரச்சினை குறித்து பேசுவதற்கு பலர் இருக்கின்றார்கள் ஆனால் அதற்கான பதில்களை காண யாரும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரச்சினையை பேசும் போது எதிர்க்கட்சிகளுக்கு அந்த மரியாதை கிடைக்கின்றது ஆனால் அரசாங்கம் தீர்வு காணும்போது அந்த மரியாதையை அரசாங்கத்திற்கு கொடுப்பதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அது அரசியல் கபட நாடகம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு பிரிவினரின் அழுத்தங்களுக்கு பதில் தேடுவதற்குப் பதிலாக, 22 மில்லியன் மக்களின் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.