பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இழப்பீடு வழங்க தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.