“2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும்” – சீனா உறுதி!

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் தலைவர்கள், தேசிய மக்கள் காங்கிரஸின் சுமார் 2900 பிரதிநிதிகள் இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது , 2024 மாநில வேலை அறிக்கையை முன்வைத்த சீனப் பிரதமர், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ள சீனா, பிரதான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை முழுமையாக அடைந்து நவீனமயப்படுத்தப்பட்ட சோசலிச நாட்டை உருவாக்க உழைத்து வருவதாக சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 75 வது ஆண்டு நிறைவாகும், மேலும் இந்த ஆண்டு ’14 வது ஐந்தாண்டு திட்டத்தை’ செயல்படுத்துவதற்கான முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version