ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று திடீரென செயலிழந்தன.
பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறையாகும்.