இலங்கை தமிழர் முகாம்களிலுள்ள 168 பயனாளர்களுக்கு இன்று புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, 8 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீடுகள் சிறுபான்மை, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கும் 80 பயனாளர்களுக்கும் நல்லம்பள்ளி ஒன்றியத்தின் பூவல்மடுவு இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 88 பயனாளர்களுக்கும் புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மக்களவை , சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.