கத்திரிக்காய்களில் கண்டறியப்பட்ட ஆபத்து…

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.

சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினாகிரி அல்லது உப்பு சேர்க்கப்பட நீரின் கழுவுவதன் மூலம் இந்த பூச்சிக்கொல்லிகளை அகற்ற முடியும் என்று உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் டி ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திற்கு தெரிவித்தார்.

மேலும் மரக்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புறத் தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை இலகுவாக அகற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version