மாத்திரை உண்டதால் 04 வயது சிறுமிக்கு நடந்தது என்ன?

பதுளையில் மருந்து மாத்திரை தொண்டையில் சிக்கியதில் 4 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக சிறுமியின் பாட்டி மாத்திரை கொடுத்ததையடுத்து குறித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தாத்தா, பாட்டி மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version