சீனா அன்பளிப்பு செய்த விசேட உபகரணங்கள் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைப்பு!

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்கள் நேற்று (13.03) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் குறித்த அன்பளிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பமிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.

இதன்போது பதினெட்டு REOD 4000 வெடிகுண்டு அகற்றும் நடுத்தர ரோபோக்கள், பதினெட்டு REOD 400 வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் ரோபோக்கள், பத்து வெடிக்கும் எதிர்ப்பு போர்வைகள் மற்றும் பத்து வெடிப்பு பாதுகாப்பு டாங்கிகள் , வாகனங்கள் என்பன கையளிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version