கனடாவில் கொலை செய்யபட்டவர்களின் இறுதி கிரியைகள் இன்று

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (17) இடம்பெறவுள்ளது.

குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் கடந்த 7ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தனர்.

இதன்போது, 35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய அவர்களது நண்பர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கொலைகளின் தன்மைக்கேற்ப மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version