எம்பியன்ஸ் சொகுசு கப்பல் நாட்டிற்கு வருகை

எம்பியன்ஸ் சொகுசு ரக கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து 1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் கப்பலில் வருகைத்தந்துள்ளனர்.

குறித்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பியன்ஸ் சொகுசு ரக கப்பல் மீண்டும் இன்று இரவு மாலைத்தீவு நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version