ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் நேற்று(18) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.