யாழில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

சேந்தாங்குளம் கடற்கரைக்கு இன்றைய தினம் மூவர் நீராட சென்ற நிலையில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இதன்பின்னர் குறித்த இருவரும் சடலங்களாக மீட்டக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 37 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version