மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்..!

இலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர் கைது செய்யப்பட்டதை கருத்திற்கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் தலையீடு செய்வதை முடிவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிடுமாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version