டெல்லி முதலமைச்சர் கைது – பழிவாங்கல் நடவடிக்கை என குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கையில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் டெல்லி முதலமைச்சரும் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் அந்நாட்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இருப்பினும்  அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்தும் முதலமைச்சாராக நீடிப்பார் என அவருடைய கட்சியான ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மதுபானக் நிதி முறைகேடு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அமலாக்கத்துறை அழைப்பு விடுத்திருந்திருந்த போதும், அவர் அதனை நிராகரித்திருந்தார். 

தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடும் செய்யப்பட்டிருந்தது. 

இருப்பினும் அமலாக்கத்துறையினர் நேற்று(21) அவருடைய வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். 

முதலமைச்சர் கைது செய்யப்பட்டமை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கல் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version