சந்திப்பு சாதகமாக நிறைவடைந்தது – பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக நிறைவடைந்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்‌ஷவிற்கு இடையிலான கலந்துரையாடல் நேற்றிரவு(21) இடம்பெற்றுள்ளது. 

இரு தரப்பினரும் தங்களுடைய கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் ஜனாதிபதியுடன் எட்டப்பட்ட உடன்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடவுள்ளார். 

கட்சிகளுக்குள் கலந்துரையாடல்கள் நிறைவடைந்ததன் பின்னர், மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

முதலில் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா இடம்பெறும் என பசில் ராஜபக்‌ஷவிடம் கேள்வி எழுப்பபட்ட போது, அவர் அதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version