ஸ்ரீயலன்ஸ் அமைப்பு இலங்கையில் விளையாட்டு சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில் நாளை(23.03) மற்றும் நாளை மறுதினம் கொழும்பு புனித சூசையப்பர்(சென்ட்.ஜோசப்) கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் பங்குபற்றும் இந்த தொடர் மூன்று அணிகளடங்கிய இரு குழுக்களாக நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை பெறுமணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறுமணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகள் போன்று ஒரு மணித்தியால போட்டிகளாக நடைபெறவுள்ளதாகவும், சர்வதேச ரீதியிலான விதிமுறைகளின் படி இந்த போட்டி நடைபெறவுள்ளதாகவும், இந்த தொடரின் தொழில்நுட்ப குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்த தொடரில் ஸ்ரீலயன்ஸ் அணி, மாலைதீவு கழகம் மட்ரிக்ஸ், இலங்கை பாடசாலைகள் தெரிவு அணி, சென்ட்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பலக்லைக்கழக அணி, அரச சேவைகள் வலைப்பந்து அணி, தேசிய சேவைகள் வலைப்பந்து சம்மேளன அணி ஆகியன இந்த தொடரில் பங்குபற்றவுள்ளன.
இலங்கை வலைப்பந்து சம்மேளனம் தேசிய வீராங்கனைகளை இந்த தொடரில் பங்குபற்ற அனுமதி வழங்கவில்லை எனவும் அதன் காரணமாக தேசிய வீராங்கனைகள் இந்த தொடரிகள் விளையாடமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலயன்ஸ் அணியில் இரண்டு மலேசியா தேசிய வீராங்கனைகள் விளையாடுவதாகவும் அந்த அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை அகிலா தாங்குகின்ற அதேவேளை சில முன்னாள் இலங்கை வீராங்கனைகள் அந்த அணியில் விளையாடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீலயன்ஸ் ஐக்கிய அரபு அமீரக்கதில் வாழும் இலங்கையர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு அமைப்பு. இந்த கழகத்தில் பல்வேறு விளையாட்டுகளில் பல சர்வதேச வீர வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ரக்பி போட்டிகளையும் இந்த அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. அத்தோடு ரக்பி அக்கடமி மற்றும் இலங்கையின் முதலாவது மகளிர் ரக்பி அக்கடமி ஆகியவற்றை ஆரம்பித்து இலங்கையின் விளையாட்டு வளர்ச்சியில் ஸ்ரீலயன்ஸ் கைகொடுத்து வருகிறது.
பல தடைகள் ஏற்பட்ட போதும், அவற்றை தாம் சுமூகமாக எதிர்கொண்டு தமது குறிக்கோளுடன் பயணித்து வருவதாகவும், தொடர்ந்தும் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சியில் தாம் கைகொடுப்போம் எனவும் ஸ்ரீலயன்ஸ் அமைப்பின் தலைவர் வைத்தியர் கெலும் சுஜித் தெரிவித்தார்.
இலங்கையில் வலைப்பந்து லீக் போட்டிகள் நடைபெறவேண்டும் எனவும், அதன் காரணமாகவே வீராங்கனைகள் வளர்ச்சி காண முடியுமெனவும், தாம் கடந்த காலங்களில் இதனை கோரிய போதும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், ஸ்ரீலயன்ஸ் அணியின் முகமாமையாளருமான திலகா ஜினதசா தெரிவித்தார். அதிக போட்டிகள் இல்லாமையினாலேயே ஆசிய மட்டத்தை தாண்டி உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெறமுடியாமல் உள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.
இந்த போட்டி தொடர் தொடர்பான அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பும், அணிகளுக்கு சீரடை வழங்கும் நிகழ்வும் நேற்று(21.03) கொழும்பு ஹலவளொக் கழக கேட்போர் கூடத்தில் ந்டைபெற்றது.
