கனாடிவில் குடியேறுவோருக்கு அதிர்ச்சி தகவல்..!

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 6.2% இலிருந்து 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வரையறை நிர்ணயிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவிற்கு வருகைத் தரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் “நிலையான” வளர்ச்சியை உறுதி செய்வதே இதன் நோக்கம் என மார்க் மில்லர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு,கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக அதிகரித்துள்ளமை மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version