குற்றவியல் சட்ட திருத்தம், உடனடி மாற்றம் வேண்டும் – சஜித் 

2024 பெப்ரவரி 13 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் பிரிவு 363 மற்றும் 364, பிரிவு 19 திருத்தச் சட்டத்தின் மூலம் உடலுறவுக்கான பெண்களின் பாலின வயதை 16 இலிருந்து 14 ஆக குறைத்தல், 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை குறைத்தல் போலவே 363 என்ற திருத்தத்தின் மூலம் ஆண், பெண் பலாத்காரத்தை ஒரே பிரிவில் கொண்டு வருவது குறித்து பெண்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரிவு 363 பெண்களுக்கு மட்டும் தனி அத்தியாயம் இருக்க வேண்டும். ஆண் தரப்பில் நடக்கும் பலாத்கார செயல்கள் ஏற்கனவே 365 B1 இன் கீழ் செயல்படுகின்றன. ஆண் தரப்புக்கு ஏற்படும் பாரபட்சத்தை வேறாக குறிப்பிடுவதில் சிக்கல் இல்லை என்றாலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பலாத்காரச் செயல்முறைகளை ஒரே பிரிவில் இணைப்பதற்கு பெண்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(22) தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெண்களின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளில் கூட கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த முன்மொழிவுகள் அரசாங்கத்தினால் கலந்துரையாடலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் முக்கியமான விடயங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் பல்வேறு நிறுவனங்கள்,தரப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் இருப்பதால், அவர்களை அழைத்து கலந்துரையாடி, இந்த தவறான செயலை கைவிட்டு, சுகாதாரத் திணைக்களத்தின் முறையான அறிவுறுத்தலின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதால், இந்த பாரதூரமான விடயங்களில் கவனம் செலுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version