மீண்டும் களத்தில் ரிஷாப் பன்ட் – டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதல் 

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவரான ரிஷாப் பான்ட், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கார் விபத்திற்கு பின்னர், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணிக்காக இன்று(23)  களமிறங்கவுள்ளார். 

புதிய மைதானமான இந்தியாவின் முள்ளன்பூர் மைதானத்தில் நடைபபெறவுள்ள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

ஒரு வருட காலத்திற்கு அதிகமான இடைவெளியின் பின்னர் மீண்டும் அணித் தலைவராக களம் காணவுள்ள ரிஷாப் பன்ட், முன்பை போன்று இம்முறையும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவரா என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதுவேளை தனியாக துடுப்பாட்ட வீரராகவா அல்லது விக்கெட் காப்பாளராக  செயற்படுவாரா என்கின்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது. 

இன்று(23.03) போட்டி நடைபெறவுள்ள  முள்ளன்பூர்  மைதானம் புதியதாக  நிர்மாணிக்கப்பட்ட மைதானம் என்பதால், ஆடுகளம் எவ்வாறானதாக அமையப் போகின்றது என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. 

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய(23) போட்டி, மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version