இறக்குமதி செய்யபடும் பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான விபரங்களை நாளாந்தம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கின்றமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாளை(25) முதல் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும், பண்டிகை காலத்தின் போது அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.