வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து கொண்டனர்.
ரவி கருணாநாயக்க முன்னிலையில் குறித்த வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் பங்குபற்றியிருந்தார்.
அதைத்தொடர்ந்து வன்னி தொகுதி காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரவி கருணாநாயக்க, வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார்.