பெண் மாணவர்களுக்கு  மாதவிடாய்  நாப்கின்களை வழங்க திட்டம்…

பாடசாலை செல்லும் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

பாடசாலை செல்லும் பெண் மாணவர்களின் சுகாதார பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் விதமாகவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பெண் மாணவர்களுக்கு சுமார் 800,000 மாதவிடாய் நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதற்கான யோசனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்காக அரசாங்கத்தினால் சுமார் 1 பில்லியன் ரூபா நிதி செலிடப்படவுள்ளதாகவும், வழங்கப்படவிருக்கும் வவுச்சர் ஒன்றின் பெறுமதி 1,200 ரூபாவாகும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version