துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி

துபாயில் நடந்த 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் பக்ரைன் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பரிசு வழங்கி கவுரவித்தார்.

இரண்டாவது பரிசு லிபியா நாட்டைச் சேர்ந்த நாஜி பின் சுலைமானுக்கும், மூன்றாவது பரிசு காம்பியா நாட்டைச் சேர்ந்த ஷேக் திஜான் அம்பிக்கும் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது ஷேக்கா ஹிந்த் பிந்த் மக்தூம்-க்கு வழங்கப்பட்டது.

துபாய் அல் மம்சார் கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்கத்தில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி மார்ச் 12 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பக்ரைன் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

திருக்குர்ஆனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டி அமைந்திருந்தது.

மேலும் நான்கு முதல் பத்து இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்-ன் மனைவி ஷேக்கா ஹிந்த் பிந்த் மக்தூம்-க்கு இஸ்லாமிய, மனிதாபிமான, சமூகப் பணிகளுக்காக வழங்கப்பட்டது.

இந்த விருதை அவரின் சார்பில் ஷேக் சயீத் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டியில் நடுவர்களாக அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version