இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மதீச பத்திரனவை, பிரபல தமிழ் சீரியல் நடிகையான நேஹா காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
இந்தியாவின் கேரளவை பிறப்பிடமாக கொண்ட நேஹா, தமிழ் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நேஹா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மதீசவின் பதிவொன்றை மீள பகிர்ந்திருந்தார். அதன் பின்னர் நேஹாவும் மதீச பத்திரனவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேஹா, மதீசவை நேரில் பார்த்தது கூட இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மதீசவிற்கே எதுவும் தெரியாது, அவ்வாறிருக்க இருவரும் எப்படி காதலிக்க முடியும் என யூடியூப் நேர்காணல் ஒன்றில் நேஹா தெரிவித்துள்ளார்.
நேஹா மேலும் தெரிவித்ததாவது, ” கிரிக்கெட் போட்டியை எப்படி பார்க்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. என் அருகில் இருந்து யாராவது சொல்லிக் கொடுத்தால் பார்ப்பேன். ஒரு முறை என் அருகில் கிரிக்கெட் பார்த்தவர் பதிரனா பற்றி பேசினார். அதன் பின்னர் பதிரனாவின் இன்ஸ்டா ஸ்டோரியை நான் ஷேர் செய்தேன். அதை பார்த்துவிட்டு நானும், பதிரனாவும் காதலிப்பதாக பேசினார்கள். அதை கேட்க ஆரம்பத்தில் ஜாலியாக தான் இருந்ததது” என தெரிவித்துள்ளார்.