கெஹலியவிற்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 பேர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரா ரம்புக்வெல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  நேற்று(27) முறைப்பாடொன்றை பதிவு  செய்திருந்தார். 

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டமை முறையற்ற செயல் எனவும் அது தொடர்பில்  உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சமித்ரா ரம்புக்வெல்ல  மனித உரிமை ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்திருந்தார்.

ஒருவர் குற்றமற்றவர் என நிரூபிக்க அரசியலமைப்பில் உரிமை உள்ளது என தெரிவித்த சமித்ரா ரம்புக்வெல்ல, தனது தந்தை விடயத்தில் அந்த உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply