யாழ் வீரன் அபாரம்;கொரியாவுக்கு அதிர்சி வழங்கிய இலங்கை

கூடைப்பந்தாட்டத்தில் ஆசிய வலயத்தின் பலமான அணியான தென் கொரியா அணியை இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது இலங்கையின் சாதனையாக பார்க்கப்படுகிறது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சிங்கப்பூரில் நேற்று(27.03) ஆரம்பித்த மூவர் விளையாடும் ஆசிய கூடைப்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் சுற்றுப் போட்டிகள் மூன்றிலும் வெற்றி பெற்று இலங்கை அணி இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. தென் கொரியா அணியுடனான போட்டியிலும், இந்தோனேசியா(21-14) மற்றும் வடக்கு மெரீனா தீவுகள்(21-13) அணியுடனான போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீரர் சிம்ரோன் யோகநாதன் முக்கிய பங்காற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை அணி தற்போது 12 அணிகள் மோதும் இறுதித் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மொங்கோலியா மற்றும் தாய்லாந்து அணிகளுடன் விளையாடவுள்ளன. குழு நிலையில் முதலிரு இடங்களை பெறுமணிகள் காலிறுத்திச் சுற்றுகுத் தகுதி பெறும். இலங்கை அணி நாளை(29.03) மதியம் 12.10 இற்கு மொங்கோலியா அணியுடனும், மாலை 6.05 மணிக்கு தாய்லாந்து அணியுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.

ஆசிய ,மற்றும் ஓசியான வலய அணிகளுக்கான அழைப்பிதழ் தொடராக இந்த தொடர் நடைபெறுகிறது. போட்டிகளை நடாத்தும் சிங்கப்பூர் மற்றும் தரப்படுத்தல்களில் முதல் 7 இடங்களை பெற்ற அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. அந்த அணிகளோடே இலங்கை அணி தற்போது இணைந்துள்ளது. இந்தியா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
.
இவ்வாறான கூடைப்பந்து தொடர்கள் இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் மூலம் விளையாட்டு துறை அமைச்சின் ஆதரவுடன் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் இவ்வாறான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த விளையாட்டு மேம்பட்டு வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி சார்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிம்ரோன் யோகநாதன், கொழும்பை சேர்ந்த பாவான் கமகே, ருக்ஷன் அத்தபத்து, அமபலாங்கொடையை சேர்ந்த டஸூன் நிலந்த ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு தரிந்து பெர்னாண்டோ பயிற்றுவிப்புகளை வழங்கி வருகிறார். இந்த அணிக்கு வாஜ் குழுமம் அனுசரணை வழங்கி தமது உடலியக்க நிறுவனத்தில் பயிச்சிகளை வழங்கி வருகிறது.

யாழ் வீரன் அபாரம்;கொரியாவுக்கு அதிர்சி வழங்கிய இலங்கை

Social Share

Leave a Reply