தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தமிழக முதலமைச்சரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி கணிசமானளவு குறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.