இறக்குமதி வரி குறைப்பு..! 

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

10 சதவீதமாக காணப்பட்ட வரியை 6 சதவீதமாக, மார்ச் 29 ஆம் திகதி முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, ஆப்பிள் உள்ளிட்ட  பழங்கள் மற்றும் குழந்தகைளுக்கான பால்மா ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் பாகங்கள் ஆகியவற்றுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. 

மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், குளியலறை உபகரணங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் மரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version