நுவரெலியா நகரில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலின் சமையலறையில் இன்று(31) ஏற்பட்ட தீயினால், சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமையலறையினுள் ரிவாயு கசிந்தமையினால் தீப்பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீப் பரவலின் காரணமாக ஹோட்டல் ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.