கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை  கடுமையாக சாடிய மோடி   

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத்தின் தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். “ கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு காங்கிரஸும் திமுகவும் கூட்டுச் சேர்ந்தன.காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் எல்லை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் குறைந்த அக்கறை கொண்டிருக்கின்றது.” என அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியும் அவரது எக்ஸ் தளத்தில் அண்ணாமலையின் பதிவை பகிர்ந்துள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கு தரைவார்க்கப்பட்டமை, ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்துவதாக தெரிவித்த மோடி காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version