பண்டிகை காலத்தில் 35 ரூபாவாக குறைவடையவுள்ள முட்டை விலை

உள்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது 35 ரூபாவாக முட்டை விலை குறைவடையவுள்ளது. 

பண்டிகை காலத்தின் போது கோழி மற்றும் முட்டையின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். 

இருப்பினும், விவசாய அமைச்சு மேற்கொண்ட நீண்ட கால தீர்மானங்களின் ஊடாக உள்நாட்டு முட்டை உற்பத்தி, தற்போது தினசரி முட்டை தேவையின் எல்லையை கடந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

நாட்டின் தினசரி முட்டை தேவை சராசரியாக 6.5 மில்லியனாகும். ஆனால், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கமைய, உள்நாட்டு கோழி பண்ணைகளில் தினசரி முட்டை உற்பத்தி 7.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், பண்டிகை காலத்தின் போது முட்டையின் விலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாய அமைச்சில் அண்மையில் பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டையின் விலை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அமைச்சர் மஹிந்த அமரவீர, முட்டை ஒன்றின் தற்போதைய விலை 42 ரூபா முதல் 48 ரூபாவாக காணப்படுகின்றமையை  சுட்டிக்காட்டியிருந்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version