தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் கனடாவுக்கு விஷயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று விஜயம் செய்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உத்தியோகத்தர்களை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் தற்பொழுது எம்.ஏ சுமந்திரன் கனடாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் இவருடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து கொள்வார் என அறியமுடிகிறது.