தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக நேற்று (20/11-இலங்கை நேரப்பபடி இன்று) கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை எம்.ஏ சுமந்திரன் கடந்தவாரம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து கனடாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் அதில் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், அவர்கள் இருவரும் கலந்துகொண்ட குறிப்பிட்ட நிகழ்வொன்றின் போது, இருவருக்கும் எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளில் கனடா மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கூச்சலிட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அந்நிகழ்ச்சியின் பாதியிலிருந்து வெளியேறியுள்ளதாக அறியமுடிகிறது.
“இனி கனடா பக்கம் வந்திராத” என கோஷமிட்டு அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.