முதல் இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தரவரிசை பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று(03) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் ஊடாக முதல் இடத்திற்கு முன்னேறியது. 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதல் இன்னிங்ஸின் போது 272 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

2024ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் அணியொன்று 270 ஓட்டங்களை கடக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

தொடரின் 8வது போட்டியின் போதும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்களை பதிவு செய்திருந்தது. ஐ.பி.எல் தொடரில் அணியொன்று பெற்று கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிவரும் சுனில் நரைன் கடந்த இரண்டு போட்டிகளின் போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். 

நேற்றைய போட்டியின் போதும், சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

மேலும், ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை மற்றும் லக்னோவ் அணி தலா 2 வெற்றிகளுடன் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன. 

மும்பை அணி, மூன்று போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் வெற்றிகள் எதுவும் இன்றி இறுதி தரவரிசைப் பட்டியலில் இடத்தில் உள்ளது. 

 ஐ.பி.எல் தொடரில் 16 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர்களின் பட்டியலில் விராட் கோலி 4 போட்டிகளில் 203 ஓட்டங்களுடன் முதலாம் இடத்திலும், அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளுடன் முதலாம் இடத்திலும் உள்ளனர். 

இதேவேளை, தொடரின் 17வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அகமதாபாத் மைதானத்தில் இன்று(04) இரவு 7 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply