ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் ஃபுகுஷிமாவில் இன்று இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 06 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
தாய்வானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.