ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேநகபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலிய – காட்மோரிலுள்ள பாடசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொங்ரீட் வளையம்
சரிந்துவீழ்ந்ததில் 11 வயதான மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.