கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரிசிப் பொதி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்குணவுத் திட்டம் மிகவும் அவசியமானதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் 532 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வில் நேற்று(07) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தாய்மார்கள் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமையை இந்த திட்டம் உறுதிப்படுத்துவதால்
இதனை வெறுமனே இலவசமாக பகிர்ந்தளிக்கும் திட்டமொன்று என கேலிக்கையாக நோக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பெண்களின் ஆரோக்கியத் துவாய் சுகாதார பிரச்சினை குறித்து தான் பேசியபோது சேறு பூசினர். இது குறித்து எமது குரல் தொடர்ந்து ஒலித்ததால், தற்போது பாடசாலை மாணவிகளுக்கு ஆரோக்கியத் துவாய் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவும் சமூக சேவை போன்றதொரு திட்டம்.

தேர்தல் வருடத்தில் இதுபோன்ற திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினாலும், பொறாமை கொள்ளாது ஆரோக்கியத் துவாய் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர், ஆனால் இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல பின்னனி காரணங்கள் உள்ளன.

சுகாதார பிரதி அமைச்சராக கடமையாற்றிய போது, 2001 ஆம் ஆண்டு உலக வங்கி சுகாதாரத் துறைக்கு வழங்கிய உதவியின் அடிப்படையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு திட்டத்தை தான் ஆரம்பித்தாலும், பின்னர் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது அத்தியாயத்தை மையமாக வைத்து அடிப்படை உரிமை மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். ஆனால் இதில் பெண்கள்,குழந்தைகள்,சிசுக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வதற்கான உரிமைகள் உள்ளடக்கப்படவில்லை. அத்தியாயம் 6 இல் சில உத்தரவுகள் இருந்தாலும், இந்த உரிமைகள் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவற்றை நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது திருத்தப்படும் .

தற்போது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதால் அதனை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளைக் கொண்டு தாய்மார்களை பாதுகாக்க வேண்டும். இதனால்தான் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்குப் பொதி வழங்கி வருகிறோம், இது வெறும் பொருட்கள் விநியோகம் அல்ல”

ஆரோக்கியமான தலைமுறையைப் பெற்றெடுப்பதற்கும், ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உள்ள உரிமையாகவே இதனை நாம் பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version