முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
காவிந்த ஜயவர்தன ஊடகங்களுக்கு இன்று(10) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை பிரச்சினைக்குரிய விடயம் என காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(09) காலை தாய்லாந்திற்கு புறப்பட்டு சென்றிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் 9 பேர் விமான நிலையத்திலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.