பெருமைமிகு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – சஜித்

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும் பண்டிகை எனவும் குறிப்பிடலாம் இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக, சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகின்றது.

இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து. தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால் கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன். வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன் தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகின்றது. இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டிற்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக, அமைதியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் கொண்ட பெருமைமிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை முன்னைய வாழ்க்கைத் தரத்திற்கு கொண்டு செல்வது எமக்கு பாரிய சவாலாக உள்ளது. அந்தச் சவாலை 220 லட்சம் பேரும் ஒன்றாகச் செயல்பட்டால் சமாளிக்க முடியும். ஒவ்வொரு இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம்.

சஜித் பிரேமதாச
இலங்கைப் பாராளுமன்றத்தின்
எதிர்க்கட்சித் தலைவர்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version