நூலிழையில் வெற்றியை தவற விட்ட பஞ்சாப் அணி – RR vs PBKS

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் இன்று(13) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

பஞ்சாப் அணி தலைவர் தவான் உபாதை காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை என்பதுடன், சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பஞ்சாப் அணி சார்பில், அசுதோஷ் சர்மா 16 பந்துகளில் 31 ஓட்டங்களையும், ஜிதேஷ் சர்மா 29 ஓட்டங்களையும் மற்றும் லிவிங்ஸ்டன் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அவேஷ் கான் மற்றும் கேஷவ் மஹராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், போலட், குல்தீப் சென் மற்றும் சலால் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி ஒரு பந்து மாத்திரம் மீதமிருக்க வெற்றி இலக்கை கடந்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில் ஜெய்ஸ்வால் 39 ஓட்டங்களையும், ஹெட்மயர் 27 ஓட்டங்களையும் மற்றும் ரியான் பராக் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ராபாட மற்றும் சாம்கரன் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

இதன்படி, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக  ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தில்  உள்ளதுடன், பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நாளை(14) நடைபெறவுள்ளன. 

மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

நாளை(14) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பெரும் எதிர்பார்ப்புமிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version