அமெரிக்கா தொடர்பு சாதனங்கள் மன்னாரில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்கள் மன்னார் கடல் பரப்பில், இலங்கை இராணுவ முகாமுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கடல் பரப்பில் மிதப்பதாக மீன் பிடிப்பர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குண்டு செயலிழப்பு பிரிவினர் குறித்த பொதியினை பரிசோதனை செய்து குண்டு இல்லை என்பதனை உறுதி செய்த பின்னர், குறித்த சாதனம் வானிலையினை சோதனை செய்யும் தொடர்பு சாதனமாக இருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா தயாரிப்பான இந்த சாதனம் மீன் பிடிப்பவர்களினால் கடலில் தவறவிடப்பட்டு கரை ஒதுங்கியிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்கா தொடர்பு சாதனங்கள் மன்னாரில் கண்டுபிடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version