பதவிகளை துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள அதிகரிப்பிற்கான நியாயமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்
பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த 10 ஆம் திகதி நடைபெறவிருந்த சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சம்பளம் வருகைத்தராமல்
புறக்கணித்தமை முழு மலையகம் மற்றும் தொப்புள் கொடி உறவை புறக்கணித்ததாக கருதுகிறேன்.

நடைபெறவுள்ள இரண்டாவது சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் எவ்வாறு நடந்துக்கொள்ளப் போகின்றார்கள்
என்பதை அவதானித்து அனைத்து தொழிற்சங்களும் ஒன்றிணைந்து
முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை விரட்டியடிப்பதற்பகான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சம்பள நிர்ணய சபை கலந்துரையாடலில்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள அதிகரிப்பிற்கான நியாயமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்
அனைத்து பதவிகளையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்” என கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version