பிரபல நடிகை தொடர்ந்தும்  விளக்கமறியலில் 

பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை தமிதாவும் அவரது கணவரும் இணைந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கருத்துக்களை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவரான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 4ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version