கப்பல் விபத்தில் சிக்கிய 21 இலங்கையர்கள் மீட்பு 

ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள், ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விபத்தின் பின்னர், மீட்புக் கப்பலொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், 21 கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும் ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டவர்களுள் ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version